காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் அருகே இத்தலம் உள்ளது. காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ளதாலும், பல்லவ மன்னன் திருப்பணி செய்ததாலும், 'காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'பல்லவனேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'சௌந்தர நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பட்டினத்தார் அவதரித்த தலம். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறத்தில் பட்டினத்தாருக்கு தனி சன்னதி உள்ளது.
இயற்பகை நாயனார் அவதரித்து தொண்டு செய்த தலம்.
காலவ முனிவர் வழிபட்ட தலம்.
இக்கோயிலுக்கு அருகில் 'திருச்சாய்க்காடு' என்னும் தேவாரப் பாடல் பெற்ற மற்றொரு தலம் உள்ளது. இரண்டு கோயிலுக்கும் இடையே உள்ள தூரம் 1/2 கி.மீ. மட்டுமே.
திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும். |